ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (15:30 IST)

ஹரியாணா சட்டப் பேரவைத் தேர்தலில் வினேஷ் போகத் போட்டியா? பரபரப்பு தகவல்..!

Vinesh Phogat
சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றும் தகுதி இழப்பு செய்யப்பட்ட வினேஷ் போகத், ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ மகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ் மோகன் அரையிறுதியில் வெற்றி பெற்றும்,  இறுதிக்கு போட்டிக்கு தகுதி பெற்ற பின்னர் அவர் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பதும் இதனால் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்தியா திரும்பிய வினேஷ் போகத்துக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் ஹரியானா மாநில அரசு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தது.

இந்நிலையில் ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் வினேஷ் போகத் போட்டியிட போவதாக அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வினேஷ் போகத்தை தேர்தலில் போட்டியிட சம்மதிக்க வைக்கும் முயற்சியில் இருப்பதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva