வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2019 (06:52 IST)

அமித்ஷாவை எதிர்த்து போட்டியிடும் குஜராத் எம்.எல்.ஏ! வெற்றி கிடைக்குமா?

வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் பலகட்டமாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று அடுத்தகட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. 
 
20 வேட்பாளர்களின் பெயர்கள் கொண்ட இந்த பட்டியலில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் தொகுதியில் அமித்ஷா போட்டியிடவுள்ள நிலையில் அவரை எதிர்த்து பாஜகவில் இருந்து சி.ஜே.சௌவ்தா என்பவர் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே காந்திநகர் வடக்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருக்கின்றார் என்பதும் உள்ளூரில் செல்வாக்கு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
சி.ஜே.செளவ்தா போட்டியிடுவதால் அமித்ஷா, தனது வெற்றிக்கு கடுமையாக பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை இருப்பதாக தொகுதி நிலவரங்கள் கூறுகின்றன. மேலும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடமே சி.ஜே.செளவ்தா பிரச்சார களத்தில் தீவிரமாக குதித்துவிட்டதாகவும் தெரிகிறது