1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2022 (21:35 IST)

தலாய்லாமாவை வேவு பார்த்த சீன பெண் உளவாளி கைது: பெரும் பரபரப்பு

thalailama
தலாய்லாமாவை உளவு பார்த்த சீன உளவாளி கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
புத்த மத தலைவர் தலாய் லாமா 1959 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த நிலையில் இந்தியாவில் அவர் தங்கி வருகிறார். 
 
இந்தநிலையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் அவர் வசித்து வரும் நிலையில் அவரை சீன நாட்டு உளவாளி ஒருவர் வேவு பார்த்ததாக தெரிகிறது.
 
இந்த நிலையில் அதிரடியாக களமிறங்கிய காவல்துறை புத்த கயா மாவட்டத்தில் தலாய்லாமாவை உளவு பார்த்த சீனப்பெண்ணை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran