சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெண்களுக்கு மாத உதவி தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அதில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பெயரிலும் ரூ.1000 ஒரு நபருக்கு அளிக்கப்பட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டில் திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தபோது மகளிருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து வந்த பல மாநில தேர்தல்களிலும் மகளிர் உதவித்தொகை அறிவிப்புகள் இடம்பெற்று வருகின்றன. சமீபத்தில் சத்தீஸ்கரிலும் பாஜக ஆட்சி அமைத்த நிலையில் பெண்கள் உதவித்தொகையை அறிவித்திருந்தது.
அதன்படி கடந்த சில மாதங்களாக உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் அதில் சன்னி லியோன் புகைப்படத்தோடு கூடிய பயனாளர் ஒருவருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பகுதியில் உள்ள தலூர் என்ற கிராமத்தை சேர்ந்த வீரேந்திர ஜோஷி என்பவர் போலியான பெயரில் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
யார் இந்த சான்றுகளை சரிபார்த்து அவருக்கு உதவித்தொகை வழங்கிய அதிகாரி என்று விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேசமயம் சத்தீஸ்கரில் பயன்பெறும் 50 சதவீத கணக்குகள் இதுபோன்று போலியானவையே என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
Edit by Prasanth.K