1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 செப்டம்பர் 2024 (17:38 IST)

5 மொழிகளில் நாளை வெளியாகிறது சன்னிலியோன் திரைப்படம்.. கோட் வசூலுக்கு பாதிப்பா?

சன்னிலியோன் நடித்த திரைப்படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் காரணமாக  கோட் பட வசூல் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இந்த படம் ஆறு நாட்களில் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இந்த வாரமும் எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை என்பதால் இன்னும் ஒரு வாரம் இந்த படத்தின் வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சன்னி லியோன் நடித்த ’கொட்டேஷன் கிங்’ என்ற திரைப்படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் குறிப்பாக தமிழகத்தில் சில முக்கிய திரையரங்குகளில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸ் காரணமாக கோட் படத்தின் வசூல் பாதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சன்னி லியோன், ஜாக்கி ஷெரப், சன்னி லியோன், பிரியா மணி, சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை விவேக்குமார் கண்ணன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசையமைத்து உள்ளார்.

Edited by Mahendran