வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (08:32 IST)

திருமணத்திற்கு பின் கட்டாய உறவு செய்தால் வன்கொடுமை ஆகாது! – சத்தீஸ்கர் நீதிமன்றம் பலே விளக்கம்!

திருமணத்திற்கு பின் பெண் ஒருவரை உடலுறவுக்கு கட்டாயப்படுத்தினால் அது பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என சத்தீஸ்கர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கரில் பெண் ஒருவர் தனது கணவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்வதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருமணமான பெண் 18 வயதிற்கு குறைவானவராக இருந்தால் அது பாலியல் வன்கொடுமையாக கருதப்படும் என்றும், திருமணத்திற்கு பின் பெண்ணை உறவுக்கு கட்டாயப்படுத்துவதை பாலியல் வன்கொடுமையாக ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் கணவர் ஒரு பெண்ணை இயற்கைக்கு மாறான உடலுறவை மேற்கொள்ள கட்டாயப்படுத்தினால் அது பாலியல் வன்கொடுமையாக கருதப்படும் எனவும் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.