1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (08:24 IST)

மோடி கோவிலில் இருந்து சிலை அகற்றம்! – புனேவில் பரபரப்பு!

புனேவில் சமீபத்தில் ஒருவர் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டியிருந்த நிலையில் அதிலிருந்த சிலை அகற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புனேவின் அவுந்த் பகுதியில் பாஜக தொண்டரான மயூர் முண்டே என்பவர் பிரதமர் மோடிக்காக ஒன்றரை லட்சம் செலவில் கோவில் ஒன்றை சமீபத்தில் கட்டினார். அதில் மார்பளவு உயரத்தில் மோடி சிலை ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. இந்த செய்தி சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் திடீரென அந்த கோவிலில் இருந்து பிரதமர் மோடி சிலை அகற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவிலை நிர்மாணித்த மயூர் முண்டேதான் சிலையை அகற்றியதாக கூறப்படுகிறது. எனினும் அவர் ஏன் அகற்றினார் என்பது குறித்த தகவல்கள் தெரிய வரவில்லை. இந்நிலையில் சிலை அகற்றப்பட்ட கோவில் முன்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.