ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (13:50 IST)

”நான் தான் சந்திரயான் 2 பேசுகிறேன்”.. இஸ்ரோவிலிருந்து வெளியான தகவல்

திட்டமிட்டபடி நிலவில் சந்திரயான் 2 தரையிரங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22 ஆம் தேதி செலுத்தப்பட்ட விண்கலமான சந்திரயான் 2, 22 நாட்கள் புவியை சுற்றிவந்த நிலையில், நிலவின் சுற்றுவட்ட பாதையை செவ்வாய்க்கிழமை சென்றடைய உள்ளது. அதன் பின்னர் செப்டம்பர் 7 ஆம் தேதியன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்படும்.

இந்நிலையில், இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில், “ நான் தான் சந்திரயான் 2 பேசுகிறேன். இந்த பிரம்மாண்டமான பயணத்தை மேற்கொண்டிருக்கும் நான், சரியாக செப்டம்பர் 7 ஆம் தேதியன்று  நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவேன்” என சந்திரயான் விண்கலம் கூறுவது போலவே பதிவு செய்துள்ளது.

நிலவின் பரப்பில் சந்திரயான் 2 தரையிறங்குவதை செப்டம்பர் 7-இல் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடியும் காண உள்ளது குறிப்பிடத்தக்கது.