செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 மே 2020 (15:24 IST)

கொரோனாவை தடுக்க புகையிலையை தடுக்க வேண்டும்! – மத்திய அமைச்சர் வேண்டுகோள்!

இந்தியாவில் கொரோனா காரணமாக அற்விக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகளை சந்தித்து வரும் நிலையில் புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்ய மத்திய அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த ,மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் வேகமாக குறைந்து வரும் நிலையில், பொருளாதார பாதிப்புகளையும் மக்கள் சந்தித்து வருகின்றனர். மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் அது முந்தடைய ஊரடங்குகளை காட்டிலும் வேறுபட்டதாக இருக்கும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தற்போது பல மாநிலங்களும் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் கொரோனா பரவாமல் இருக்க புகையிலை பொருட்களை தடை செய்வது அவசியம் என கூறியுள்ள அவர், புகையிலையை தடை செய்ய மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வேண்டுகோளாக இதை முன்வைத்துள்ளார்.