செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By
Last Updated : புதன், 6 மே 2020 (09:58 IST)

முன்னாள் மத்திய அமைச்சர் மரணம்! இன்று மாலை இறுதி ஊர்வலம்!

முன்னாள் மத்திய அமைச்சரான தலித் எழில்மலை இன்று மாரடைப்புக் காரணமாக மரணமடைந்துள்ளார்.

பாமக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராகவும் இருந்தவர் தலித் எழில்மலை . இவர் செங்கல்பட்டு மாகாணாத்தில் 1945ஆம் ஆண்டு ஜூன் 24ம் தேதி பிறந்தார்.

இவர் அரசியல் மட்டுமில்லாது ராணுவத்தில் பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1971ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் போரில் ராணுவ அதிகாரியாக பங்கு பெற்றார் தலித் எழில்மலை. ராணுவ சேவைக்காக ஜனாதிபதியிடமிருந்து கே. சைனிக் சேவா பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை மாரடைப்புக் காரணமாக அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.