கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது – மத்திய அமைச்சர் தகவல்!
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது வைரஸின் தாக்கம் மெல்ல குறைந்து வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாத காலத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இந்த வார இறுதியில் இரண்டாம் கட்ட ஊரடங்கும் முடிய உள்ள நிலையில் பிரதமர் மோடி கொரோனா பாதிப்புகள் குறித்து இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களோடு மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் காணொளி மூலமாக பேசினார். சிகிச்சை நடவடிக்கைகள், மருத்துவ வசதிகள் குறித்து அவர் நோயாளிகளிடம் கேட்டறிந்துள்ளார்.
பிறகு பேசிய அவர் தொடர்ந்து கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது குறைந்துவிட்டதாகவும், சில நாட்களில் கொரோனா முழுமையாக நீங்க வாய்ப்புள்ளதாகவும், மாநில அரசுகளும், மக்களும் தொடர்ந்து ஊரடங்கை சரியான முறையில் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.