புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 ஜூன் 2021 (16:01 IST)

மத்திய அமைச்சரின் டுவிட்டர் பக்கம் முடக்கம்: பெரும் பரபரப்பு

மத்திய அமைச்சர் ஒருவரின் டுவிட்டர் பக்கம் திடீரென இன்று முடக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களாக மத்திய அரசின் புதிய ஐடி கொள்கையை ஏற்றுக் கொள்ள மறுத்து டுவிட்டர் பிரச்சனை செய்து வருவதால் இந்திய அரசுக்கும் டுவிட்டருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி உத்தரபிரதேச மாநில அரசு கூறிய வீடியோ ஒன்றையும் டெலிட் செய்ய ட்விட்டர் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
இந்த நிலையில் மத்திய அமைச்சர் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. தன்னுடைய டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு கூறியுள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டிஜிட்டல் பதிப்பு உரிமை சட்டத்தை மீறியதாக கூறி எனது டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். இதனால் மத்திய அரசுக்கும் டுவிட்டர் நிறுவனத்திற்கும் இடையே மேலும் பிரச்சனை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது