1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 15 ஜூன் 2021 (16:10 IST)

நடிகர் ராஜ்கிரணின் முகநூல் கணக்கு முடக்கம்?

நடிகர் ராஜ்கிரணின்  முகநூல் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

பேமிலி மேன் வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் வெளியானதில் இருந்து ஈழம், விடுதலைப் புலிகள் மற்றும் பிரபாகரன் பற்றி சமூகவலைதளங்களில் அதிகமாக விவாதங்கள் நடக்கின்றன. ஒரு சாரார் பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை கேலி செய்தும் இழிவு செய்தும் பகிர, மற்றொரு தரப்பினர் பிரபாகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சினிமா பிரபலங்களில் தன்னுடைய முகநூல் கணக்கை தானே இயக்கி வரும் ராஜ்கிரண் பிரபாகரனுக்கு ஆதரவாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட, அந்த பதிவை நீக்கிய முகநூல் நிர்வாகம், ராஜ்கிரணின் கணக்கையும் சில மாதங்களுக்கு முடக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.