வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 9 மே 2020 (13:20 IST)

மிதமான அறிகுறி உள்ளவர்கள் வீடுகளில் இருக்கலாம்! – சுகாதாரத்துறை அறிவிப்பு!

கொரோனா பாதிப்பினால் நாடு முழுவதும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் சூழலில் மிதமான அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனைகளில் இருக்க தேவையில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் இரண்டு கட்ட பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் 14 நாட்களுக்கு பிறகு மீண்டும் சோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது, இந்நிலையில் தற்போது பாதிக்கப்பட்டவர்களை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து மத்திய சுகாதாரத்துறை புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது.

அதன்படி கொரோனா குறித்த மிதமான அறிகுறி உள்ளவர்களுக்கு மூன்று நாட்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தெரியாத பட்சத்தில் அவர்களை டிஸ்சார்ஜ் செய்யலாம். வீடு திரும்பிய நபர்கள் ஏழு நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தீவிரமாக பாதிக்கப்பட்டோருக்கு பிசிஆர் சோதனைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

இதனால் மிதமான பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை மருத்துவமனைகளில் குறைவதோடு பாதிப்பு எண்ணிக்கையும் குறைய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.