1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain Alert for 8 Districts, Including Chennai: Meteorological Center..!

சென்னை உள்பட 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

சென்னை
சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் அறிவித்துள்ளது 
 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாகவும் வங்கக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாகவும் தமிழகத்தில் பரவலாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது என்பதும் தற்போது கூட மழை பெய்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் உள்ள அறிக்கையில் இன்று சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று அறிவித்துள்ளது.
 
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேற்கண்ட மாவட்டத்தில் உள்ளவர்களும் புதுச்சேரியில் உள்ளவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்
 
 
Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!