தடுப்பூசி போட்டிருந்தாலும் நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்! – வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு!
இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் தடுப்பூசி போட்டிருந்தாலும் நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் நீடித்து வரும் நிலையில் உலக நாடுகள் தங்கள் நாட்டிற்குள் வரும் வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவிற்குள் வரும் வெளிநாட்டு பயணிகள் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என்ற கட்டுப்பாடு உள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் தடுப்பூசி போட்டிருந்தாலும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.