வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 20 அக்டோபர் 2021 (16:59 IST)

வாகா எல்லையில் தேசிய கொடியுடன் அஜித் ! வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் வலிமை.

இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் பாடல் மற்றும் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் நிறைவடைந்த நிலையில், நடிகர் அஜித்குமார் சொகுசு பைக்கில் பயணம் செய்தார். பின்னர் உலகப் புகழ்பெற்ற பைக் ரைடர் பெண்ணைச் சந்தித்து அவரிடம் ஆலோசனை கேட்டார்.

அஜித் கடந்த சில நாட்களாக வட இந்திய சுற்றுப்பயணம் செய்துள்ளார் என்பதும் அங்கு ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தல அஜித் இந்தியக் கொடியை ஏந்தியபடி இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் அங்குள்ள அஜித் ரசிகர்கள் என இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நடிகர் அஜித் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்றும் அந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கி விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.