புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2024 (14:17 IST)

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர்.. 6 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமா?

new parliament  India
நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் 6 புதிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து சமீபத்தில் புதிய எம்பிக்கள் பதவி ஏற்று கொண்ட நிலையில் நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 22 ஆம் தேதி தொடங்க உள்ளது
 
 ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரில் 6 புதிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒன்று பேரிடர் மேலாண்மை சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா என்பது குறிப்பிடத்தக்கது.
 
மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள மசோதாக்கள் பட்டியல் இதோ:
 
நிதி மசோதா
பேரிடர் மேலாண்மை மசோதா
கொதிகலன்கள் மசோதா
பாரதிய வாயுயன் விதேயக் மசோதா
காபி மசோதா
ரப்பர் மசோதா
 
மேற்கண்ட  இந்த ஆறு மசோதாக்களை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
Edited by Mahendran