1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: மத்திய அரசு அறிவிப்பு!

இருசக்கர வாகனத்தில் பெற்றோர்களுடன் செல்லும் குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்றும் இந்த முறை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள், பின்னால் அமர்ந்து செல்பவர்கள் விபத்தின்போது உயிர் இழப்பு ஏற்படுவதாக வெளிவரும் செய்திகளை அடுத்து தற்போது வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் உட்கார்ந்து இருப்பவர் கண்டிப்பாக ஹெல்மெட் போட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்றும், குழந்தைகளை வைத்துக் கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் 40 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
 
9 மாதம் முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது