வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 14 மார்ச் 2020 (10:15 IST)

பெட்ரோல் விலையைக் குறைப்பாங்கன்னு பாத்தா… வரிய ஏத்தி இருக்காங்க – மத்திய அரசு அறிவிப்பால் அதிர்ச்சியில் மக்கள் !

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலை குறையும் என எதிர்பார்த்திருந்த நிலையில் கலால் வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பீதியால் கச்சா எண்ணெய் விலைக் கடுமையாக குறைந்து வருகிறது. அதனால் பெட்ரோல் விலையும் குறைந்து வருகிறது.

இதனால் மேலும் 5 முதல் 6 ரூபாய் விலை குறையும் என எதிர்பார்த்திருந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலைக் குறையாது என தெரிகிறது.