இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
இன்று மாலை மற்றும் இரவில் 19 மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென் இந்திய பகுதிகளில் முழுவதும் கிழக்கு திசை காற்று வீசும் நிலை உள்ளது. இதன் விளைவாக, வரும் 5-ஆம் தேதி முதல் பருவமழை தீவிரம் அடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் நவம்பர் 2-ஆம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதில் திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, மதுரை, திருச்சி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்கள் அடங்கும்.
Edited by Siva