1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 13 மார்ச் 2020 (20:32 IST)

LKG, UKG மாணவர்களுக்கு விடுமுறை... தமிழக அரசு உத்தரவு !

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதிலும் 4720 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 1,28,343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
 
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில்,  4 பேருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருந்ததை இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. டெல்லியில் 6, உத்தர பிரதேசத்தில் 10, மகராஷ்டிராவில் 11, லடாக்கில் 3 என இதுவரை இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 81 பேர் இந்த  வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் LKG, UKG படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 16 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.