வங்கக்கடலில் புயல்: 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
வங்க கடலில் புயல் உருவாகி உள்ளதை அடுத்து தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது
வங்க கடலில் உருவாகும் புயல் வரும் 26ஆம் தேதி ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனை அடுத்து தமிழகம் ஆந்திரா ஒரிசா மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் கடலோர பகுதிகளிலும் அந்தமான் தீவிலும் கனமழை பெய்யும் என்றும் இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய உள்துறை செயலாளர் அறிவித்துள்ளார்
மேலும் இதுகுறித்து மத்திய நல்வாழ்வுத்துறை செயலாளர் நான்கு மாநில தலைமை செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் புயல் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் கொரோனா சிகிச்சை முகாம்களில் உள்ள நோயாளிகளை வேறு முகாமுக்கு மாற்ற வேண்டும் என்றும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மின்சாரம் தண்ணீர் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.