வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (15:20 IST)

செப்டம்பர் முதல் வாரத்தில் வங்கிகளுக்கு 6 நாட்கள் விடுமுறை? வதந்திக்கு விளக்கமளித்த மத்திய அரசு

செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் வங்கிகளுக்கு 6 நாட்கள் விடுமுறை என பரவி வரும் செய்திகளுக்கு மத்திய அரசு தெளிவாக விளக்கம் அளித்துள்ளது. 

 
செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் 3ஆம் தேதி 9ஆம் தேதி வங்கிகளுக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து வங்கிகள் சார்பில் எதுவும் தெரிவிக்கப்படாததால் மக்கள் குழப்பில் இருந்தனர்.
 
இந்நிலையில் மத்திய நிதித்துறை அமைச்சகம் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தெளிவாக விளக்கம் அளித்துள்ளது. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
 
8ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. 3ஆம் தேதி சில மாநிலங்களில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக இருக்கும். நாடு தழுவிய அளவில் வங்கிகள் மூடப்படாது. 3ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறையாக இருந்தாலும் ஆன்லைன் பரிமாற்றம் எந்த தடையும் இன்றி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.