காஷ்மீர் விவகாரம் – பாராட்டுகளை தெரிவித்த பிரபலங்கள்
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை தொடர்ந்து கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பாலிவுட் பிரபலங்கள் தங்கள் ஆதரவை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இன்ஸ்டாக்ராமில் கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரெனாவத் “நீண்ட நாட்கள் கழித்து சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டிருப்பது, வரலாற்றில் தீவிரவாதமற்ற நாட்டை உருவாக்குவதற்கான முக்கியமான முடிவாகும். திரு மோடி அவர்கள் இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது.” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மதுர் பண்ட்டெர்கர் “வரலாற்று தருணம். 370 நீக்கப்பட்டது. தைரியமான முயற்சி” என்று பதிவிட்டுள்ளார்.
எழுத்தாளர் சேதன் பகத் “ஆகஸ்டு 5, 2019. காஷ்மீர் கடைசியாக விடுதலையானது. வளர்வதர்கான சுதந்திரம், எதிர்காலத்திற்கான சுதந்திரம். சட்டப் பிரிவு 370 போய்விட்டது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல்வேறு திரை பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளை மத்திய அரசுக்கு தெரிவித்து வருகின்றனர்.