ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (16:20 IST)

காஷ்மீரில் மேலும் 8000 வீரர்கள் குவிப்பு – பதட்டநிலை அதிகரிப்பு

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துகள் நீக்கப்பட்டதை அடுத்து காஷ்மீர் குடியிருப்பு பகுதிகளில் ராணுவ வீரர்கள் அதிகளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு அந்தஸ்தை நீக்கி இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மத்திய அரசின் முடிவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காஷ்மீர் பகுதிகளில் வன்முறை சம்பவங்களை தவிர்க்க 30000 வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தியுள்ளது இந்திய அரசு.

வான்வழிப் படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் பகுதிகள் முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் 8000 வீரர்களை உடனடியாக காஷ்மீருக்கு இடம் மாற்றுகிறது இந்திய அரசு. இவர்கள் விமானம் மூலம் காஷ்மீர் பகுதிகளுக்கு செல்கிறார்கள்.

மேலும் அதிகளவில் வீரர்கள் குவிக்கப்படுவதால் எல்லைப்பகுதிகளில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.