பிகாரை அடுத்து மகாராஷ்டிரத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு?

திங்கள், 9 ஜனவரி 2023 (15:57 IST)
பீகாரில் தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு பணி நடைபெற்று வரும் நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மத்திய அரசு அந்தக் கோரிக்கையை மறுத்துவிட்டது 
 
இந்த நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என சமீபத்தில் அறிவித்தார். இதனை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ள நிலையில் அம்மாநில முதல்வர் விரைவில் அதற்கு ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
தமிழகத்தில் பல ஆண்டுகளாக பாமக உள்பட ஒருசில கட்சிகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

ஜூலை 17 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைன் மூலமே நாமே பதிவு செய்யலாம்.. முழு விவரங்கள்..

என்னை அமைதிப்படுத்த வேண்டுமானால், நீங்கள் என்னை கொல்ல வேண்டும்.. மம்தாவின் ஆவேச வீடியோ

விஜய்தான் களவாணி!. வெறும் பன்ச் டயலாக்தான்!.. பழனிச்சாமி பேட்டி..

தவெகவை தோற்கடிக்க இது ஒன்னுதான் வழி!.. திமுக - அதிமுக இணைகிறதா?!...

அமலாக்க துறைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ஐசரி கணேஷ்! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments