புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2019 (13:13 IST)

கஃபே காபிடே உரிமையாளர் மாயம் – தற்கொலையா ?

பிரபலமான கஃபே காபி கடையின் உரிமையாளரான வி.ஜி.சித்தார்த்தா திடீரென நேற்றிரவில் இருந்து காணாமல் போயுள்ளார்.

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கஃபே காபி கடையின் உரிமையாளரான வி.ஜி.சித்தார்த்தா திடீரென மாயமாகியுள்ளார். இவர் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் ஆவார்.

நேற்று இரவு மங்களூருவுக்கு அருகிலுள்ள நேத்ராவதி நத்திக்கு அருகில் காரில் சென்று கொண்டிருந்தபோது காரில் இருந்து இறங்கி வாக்கிங் சென்றுவருவதாகக் கூறி சென்ற இவர் மீண்டும் திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது மொபைல் எண்ணும் அனைத்து வைக்கப்பட்டதால் சந்தேகம் அதிகமாகியதை அடுத்து போலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சித்தார்த்தா தனது நிறுவனத்தின் இயக்குனருக்கு எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில் தனது தொழிலை தன்னால் லாபகரமனதாக நடத்த முடியவில்லை என்றும் தன் மேல் நம்பிக்கை வைத்தவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் நதியில் விழுந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனப் போலிஸ் சந்தேகித்துள்ளது. இதையடுத்து அவரைத் தேடும் பணியில் முடுக்கிவிட்டுள்ளது.