1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 27 நவம்பர் 2022 (14:56 IST)

மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும்: பாஜக அறிவிப்பு

West Bengal
மேற்கு வங்க மாநிலத்தில் சிஏஏ என்று கூறப்படும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 மேற்கு வங்க மாநிலத்தில் வங்கதேசத்திலிருந்து முறைகேடாக வந்து தங்கியவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் மேற்குவங்க பாஜக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி, ‘மேற்கு வங்க மாநிலத்தில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறினார்
 
முதல்வர் மம்தா பானர்ஜிக்கு துணிச்சல் இருந்தால் அதை தடுத்து பாருங்கள் என்றும் உரிய ஆவணங்களுடன் வசிக்கும் மக்கள் யாருடைய குடியுரிமையும் பாதிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேற்கு வங்க மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva