1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2022 (17:16 IST)

மம்தா பானர்ஜியுடன் எதிர்க்கட்சி தலைவர் திடீர் சந்திப்பு.. என்ன திட்டம்?

suvandhu athikari
மம்தா பானர்ஜியுடன் எதிர்க்கட்சி தலைவர் திடீர் சந்திப்பு.. என்ன திட்டம்?
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உடன் மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவெந்து அதிகாரி திடீர் சந்திப்பு நடத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மம்தா பானர்ஜியை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டவர் பாஜகவை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் சுவெந்து என்பது தெரிந்ததே
 
இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மம்தா பானர்ஜி முதல்வரானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை எதிர்க்கட்சித் தலைவர் சுவெந்து  அதிகாரி திடீரென சற்றுமுன் சந்தித்துள்ளார் 
 
இந்த சந்திப்பில் பல்வேறு அரசியல் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. பாஜகவை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் மேற்குவங்க முதலமைச்சருடன் நடந்த இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran