Daily Horoscope

சி.ஏ. படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு: 20 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை..!

Written By Mahendran
Updated: வியாழன், 11 ஜூலை 2024 (15:31 IST)
சிஏ படிப்புக்கான தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இதுவரை ஒவ்வொரு ஆண்டும் 13,000 பேர் முதல் 14000 பேர் வரை தேர்ச்சி பெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு 20,000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிஏ முதல் தொகுதி தேர்வை இந்த ஆண்டு 74 ஆயிரத்து 887 மாணவர்கள் எழுதினர். அதில்  20 ஆயிரத்து 479 பேர் தேர்ச்சி பெற்றதாகவும், இரண்டாவது தேர்வை எழுதிய 58 ஆயிரத்து 891 மாணவர்களில் 21 ஆயிரத்து 408 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சி.ஏ. குரூப் 1 இண்டர் தேர்வு எழுதிய 1 லட்சத்து 17 ஆயிரத்து 764 பேரில் 31 ஆயிரத்து 978 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், சி.ஏ. குரூப் 2 இன்டர் தேர்வு எழுதிய 71 ஆயிரத்து 145 பேர்களில் 13 ஆயிரத்து எட்டு பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிஏ தேர்வு முடிவுகளை icaiexam.icai.org, icai.org, icai.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்

Edited by Mahendran
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments