நம்பிக்கையா? உறுதியா? ஜல்லிக்கட்டுக்கு பயிற்சி பெறும் காளைகள்
ஆண்டிப்பட்டி பகுதியில் பொங்களுக்கு தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த வருடமாவது பொங்களுக்கு ஜல்லிக்கட்டு நடைப்பெறுமா என்ற கேள்வி தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பாட்டு பகுதி மக்கள் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்த வருடமாவது ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற நம்பிக்கையில் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகிறோம். அனுமதி கிடைக்காவிட்டால் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம் என்று கூறினர்.
வயல் வெளியில் காளைகள் மண்ணை முட்டி தள்ளும் பயிற்சி, தண்ணீருக்குள் நீச்சல் பயிற்சி போன்றவை அளிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காகவே காங்கேயம், தேனி மலை மாடு உள்ளிட்ட 8 வகையான காளைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் அந்த மக்கள் ஜல்லிக்கட்டு கட்டாயம் அனுமதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளார்களா? அல்லது கட்டாயம் ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்ற உறுதியுடன் உள்ளார்களா?