புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (15:51 IST)

கட்டிட விபத்து ..19 மணி நேரத்திற்கு பிறகு சிறுவன் மீட்பு!

மஹாராஸ்டிர மாநிலம் ராய் கட்  மாவட்டத்தில் காஜல்புரா என்ற இடம் உள்ளது. இங்குள்ள 5 மாடிக் கட்டிடம் திடீரென இடித்து விழுந்தது.

இதில், சிக்கிக் கொண்ட 4 வயது சிறுவன் மாட்டிக்கொண்டான். பின்னர், பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து 19 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் சிறுவனை உயிருடன் மீட்டனர்.

இதையடுத்து, சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இக்கட்டிய இடுப்பாடுகளில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர். 70 பேர் வரை இந்த இடிபாடுகளில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.