ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 1 பிப்ரவரி 2023 (10:50 IST)

சிகப்பு நிற காட்டன் சேலையில் நிர்மலா சீதாராமன் - கைத்தறி மீது கவனம்?

இந்தியாவின் நிதியமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஐந்தாவது மத்திய பட்ஜெட்  கூட்டத்தொடர் இன்று புதன் கிழமை காலை 11ம் மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. 
 
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கூடும் இந்த கூட்டத்தொடரில் நடுத்தரமக்களுக்கு நிறைய சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்க முடிகிறது. அந்தவகையில் பட்ஜெட் தாக்கல் செய்ய வந்திருக்கும் நிர்மலா சீதாராமன் கருப்பு பார்டர் கொண்ட பிரகாசமான சிகப்பு நிற போச்சம்பள்ளி பட்டு சேலையை அணிந்து வந்திருக்கிறார்.
 
கைத்தறி புடவைகள் மீது அதீத காதல் கொண்ட நிர்மலா சீதாராமன் பெரும்பாலும் காட்டன் புடவைகளை தான் அணிவார்.  ஒவ்வொரு ஆண்டின் பட்ஜெட்டின் போதும் அவர் அணிந்து வ்ரும் சேலைகள் சமூக வலைதளங்களில் கவனம் பெறும். இதனால் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கைத்தறி நெசவாளர்களுக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.