செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 நவம்பர் 2022 (13:32 IST)

சீதனமாக வந்த காரை ஓட்டிப்பார்த்த மாப்பிள்ளை: விபத்து ஏற்பட்டு ஒருவர் பலி!

Car
சீதனமாக வந்த காரை ஓட்டிப்பார்த்த மாப்பிள்ளை: விபத்து ஏற்பட்டு ஒருவர் பலி!
மாமனார் வீட்டில் இருந்து சீதனமாக வந்த காரை மாப்பிள்ளை ஒட்டி பார்த்த போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கான்பூர் அருகே இளைஞர் ஒருவருக்கு திருமணம் நடந்தது. இதனை அடுத்து பெண் வீட்டில் இருந்து வரதட்சணையாக புதிய கார் வழங்கப்பட்டது
 
புதிய காரை பார்த்ததும் மாப்பிள்ளை அந்த காரை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தார். இதனை அடுத்து அவர் காரை ஓட்டியபோது அருகே இருந்த உறவினர்களின் கூட்டத்தில் புகுந்தது.  இதில் மாப்பிள்ளையின் அத்தை உயிரிழந்ததாகவும் 4 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியானது 
 
இதனையடுத்து காவல்துறையினர் இதுகுறித்து மாப்பிள்ளையிடம் விசாரித்தபோது அவருக்கு கார் ஓட்ட தெரியாது என்றும் கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் இல்லை என்றும் தெரியவந்தது 
 
இதனை அடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கார் ஓட்டத் தெரியாத மாப்பிள்ளைக்கு பெண் வீட்டில் இருந்து வரதட்சணையாக கார் வழங்கப்பட்டதும் அந்த கார் விபத்து ஏற்பட்டு உறவினர் ஒருவர் பலியாகி உள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran