1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 2 ஏப்ரல் 2018 (13:20 IST)

முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது

புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த  நபரின் தந்தையை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 
புதுச்சேரி போலீஸ் கட்டுபாட்டு அறை தொலைபேசிக்கு இன்று அழைப்பில் பேசிய மர்ம நபர், முதல்வர் நாரயாணசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டியுள்ளார். இதனால் வெடிகுண்டு நிபுணர்கள் முதல்வர் வீட்டில் அதிரடியாக  சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வதந்தியை பரப்பும் நோக்கில் அந்த மர்ம நபர் பேசியிருப்பது தெரியவந்தது.
 
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரனையில், தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் விழுப்புரத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பவரின் மகன் புவனேஷ்வர் என்பது தெரியவந்தது. 
 
இதனையடுத்து, போலீசார் புவனேஷ்வர்ரை விசாரிக்க சென்ற போது அவன் தலைமறைவாகியுள்ளான். அதனால் அவரது தந்தை புண்ணியமூர்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.