திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 11 ஜூலை 2019 (12:58 IST)

குத்தாட்டம் போட்ட எம்.எல்.ஏ.வை கும்மாங்குத்து குத்திய பாஜக..

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. மதுபோதையில் துப்பாக்கியுடன் ஆடிய வீடியோ வைரலான நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்க பாஜக பரிந்துரை செய்துள்ளது.

உத்திரகாண்ட் மாநிலத்தின் பாஜக எம்.எல்.ஏ. பிரணவ் சிங், பத்திரிக்கையாளர்களை மிரட்டி, தாக்க முயன்ற விவகாரத்தால், கடந்த மாதம் கட்சித் தலைமையால், 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் தனது காலில் அறுவை சிகிச்சை முடித்து வீடு திரும்பிய பிரணவ் சிங், தனது ஆதரவாளர்களுடன் தான் சிசிச்சை பலன் பெற்று மீண்டு வந்ததை மது அருந்தி கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தின் போது, பிரபல பாலிவுட் குத்து பாடல் ஒன்றிற்கு கைகளில் துப்பாக்கியுடன் நடனமாடினார்.

அவர் இவ்வாறு கைகளில் துப்பாக்கியுடன், மது போதையில் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவர், ஷியாம் ஜாஜு, இன்று செய்தியாளர்களுடன் பேசினார்.

அதில், துப்பாக்கிகளுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்.எல்.ஏ.வான பிரணவ் சிங்கை, கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்ய பாஜக மேலிட தலைவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக கூறினார். மேலும் பிரணவ் சிங்கின் கையில் உள்ள துப்பாக்கி, சரியான உரிமம் பெற்ற துப்பாக்கி தானா என்று விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.