திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 29 நவம்பர் 2023 (16:17 IST)

தெலுங்கானாவில் பணப்பட்டுவாடா ஜோர்.. இரு கட்சிகளும் பணம் கொடுப்பதாக பாஜக குற்றச்சாட்டு..!

தெலுங்கானா மாநிலத்தில் நாளை 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் பணப்பட்டுவாடாவில் தீவிரமாக இருப்பதாக பாஜக குற்றம் சாட்டி உள்ளது.  

பாஜகவின் மூத்த தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி ஹைதராபாத்தில் உள்ள பாக்கியலட்சுமி கோவிலுக்கு வந்து வழிபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது  ’தெலுங்கானாவில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பணியை காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் தொடங்கி விட்டதாகவும் இரு கட்சிகளும் மாறி மாறி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தேர்தல் அமைதியாக நடக்க அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும் என்றும் மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்காக சூழல் வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பணம் மட்டுமின்றி மதுவும் விநியோகிக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் அதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்  

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும்தான் பலத்த போட்டி இருப்பதாகவும் பாஜக இந்த மாநிலத்தில் ஆறு முதல் ஒன்பது தொகுதிகள் வரை மட்டுமே வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்புகள் கூறப்படுகின்றன.

Edited by Mahendran