வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2024 (18:22 IST)

மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கிய முதல்வர்.. கண்டனம் தெரிவித்து பாதயாத்திரை செல்லும் பாஜக..!

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரத்தை கண்டித்து மைசூர் நோக்கி பாத யாத்திரை மேற்கொள்ள போவதாக பாஜக அறிவித்துள்ளது
 
கர்நாடக முதல்வர் சித்தராமையா  மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு மைசூர் நகர மேம்பாட்டு கழகம் கையகப்படுத்தியது. இந்த நிலையில் பார்வதியின் கோரிக்கையை தற்போது அவருக்கு விஜயநகரில் மாற்று நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அவருடைய ஒரிஜினல் நிலத்தின் மதிப்பை விட அதிகமான மதிப்புள்ள நிலத்தை ஒதுக்கி இருப்பதை அடுத்து பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதில் ரூ.3000 கோடி ஊழல் நடந்திருப்பதாக  எதிர்க்கட்சிகள் குற்றம் காட்டி வரும் நிலையில் முதல்வர் சித்தராமையாவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி பாத யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது.

பெங்களூரில் இருந்து மைசூர் நோக்கி பாதயாத்திரை செய்யப் போவதாகவும் இந்த பாதயாத்திரையின் போது இதில் நடந்த ஊழல்கள் குறித்து மக்களிடம் எடுத்து சொல்லப் போவதாகவும் பாஜக தெரிவித்துள்ளது. இந்த யாத்திரையில் பாஜகவின் கூட்டணியில் கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளம் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva