1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (10:26 IST)

ஆக்ஸிஜன் கேட்டு கதறியவரை அடிப்பதாக மிரட்டிய பாஜக அமைச்சர்!

மத்திய பிரதேசத்தில் ஆக்ஸிஜன் கேட்டு கதறிய நபரை கன்னத்தில் அறைவேன் என பாஜக அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் நாட்டின் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் பெரும் பிரச்சினையை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களான மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பலர் ஆக்ஸிஜனை வெளியிலிருந்து தங்கள் உறவினர்களுக்காக வாங்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சராக இருப்பவர் பிரஹலாத் படேல். சமீபத்தில் தமோ மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இவர் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மக்கள் பலர் ஆக்ஸிஜன் சிலிண்டர் கேட்டு அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்போது ஒரு நபர் தனது தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ஆக்ஸிஜன் தர மறுப்பதாகவும் அவரிடம் உதவி கேட்டு கதறியுள்ளார்.

அதற்கு அவர் ”இப்படியே பேசிக் கொண்டிருந்தால் கன்னத்தில் அறை விடுவேன்” என திட்டயது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பிரகலாத் படேலை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.