புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2019 (07:56 IST)

இன்று சத்துணவில் முட்டை, நாளை மனிதக்கறி: பாஜக மூத்த தலைவர் சர்ச்சை கருத்து!

தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவுடன் முட்டை வழங்குவது போன்று மத்திய பிரதேச மாநிலத்திலும் அங்கன்வாடி  பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் இம்மாநிலத்தில் அங்கன்வாடி  பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு முட்டைகள் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது
 
இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய எதிர்கட்சி தலைவரும், மத்திய பிரதேச மாநில பாஜக மூத்த தலைவருமான கோபால் பார்கவா, ’அசைவம் சாப்பிடுவது என்பது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் இன்று சத்துணவுடன் முட்டை சாப்பிடும் குழந்தைகள் எதிர்காலத்தில் மனித கறியான  நரமாமிசம் சாப்பிடுபவர்களாக மாறி விடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். 
 
மேலும் அங்கன்வாடிகளில் முட்டை வழங்க முடிவு செய்துள்ள மத்திய பிரதேச  அரசு எதிர்காலத்தில் கோழிக்கறி, ஆட்டுக்கறி ஆகியவற்றையும் உண்ண குழந்தைகளை வற்புறுத்தும் என்றும் அது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  
 
பாஜக மூத்த தலைவர் கோபால் பார்கவா பேசிய இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனிதக்கறி சாப்பிடும் வழக்கம் உலகில் எங்குமே இல்லை என்றும், சத்துணவு சாப்பிடும் சிறு குழந்தைகளை பாஜகவின் கோபால் பார்கவா அவமதித்துள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.