திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 11 மார்ச் 2024 (15:29 IST)

இந்தியாவை இந்து நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது.-ப.சிதம்பரம்

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி அனந்தகுமார், அரசியலமைப்பை மாற்றுவோம் என் கூறியதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
 
விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ளது. இதற்காக பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில்,  கார்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி அனந்த்குமார், 'இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்துக்களுக்கு எதிராக உள்ளது. மக்களவை தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவோம்'' என பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும், 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என பிரதமர் மோடி கூறியது இதற்காகத்தான் என  அனந்தகுமார் ஹெக்டேட் பேசியதற்கு அர்சியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம், ''அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி,இந்தியாவை இந்து நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது. இவர்களின் இந்த  நோக்கம் ரகசியமானது கிடையாது. இந்த முயற்சி ஜனநாயகம்,கூட்டாட்சி தத்துவம், சிறுபான்மையினர் உரிமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் . நாட்டின் ஒரே ஆட்சி மொழியாக இந்தியை மாற்ற முயற்சிக்கின்றனர். மாநில அரசுகள் மீது ஒன்றிய அரசு ஆதிக்கம் செலுத்தும் வகையில் சட்ட திருத்தம் செய்யவும் பாஜக முயற்சிக்கிறது ''என்று விமர்சித்துள்ளார்.