திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 11 மார்ச் 2024 (15:15 IST)

தமிழகத்தின் உண்மையான கலாச்சாரத்தை அழிக்க துடிக்கிறார்கள்: ஆளுநர் ரவி

governor ravi
தமிழகத்தின் உண்மையான கலாச்சாரம், அடையாளத்தை அழிக்க நிறைய பேர்  துடிக்கிறார்கள் என்று ஆளுநர் ரவி இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் பேசியதாவது: ராபர்ட் கால்டுவெல் எழுதிய புத்தகம் உண்மையை சொல்லவில்லை. ஆங்கிலேயர்கள் சென்ற பிறகும் கூட பிரிவினையை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. ராமேஸ்வரம் கோயில் கோபுரம் வண்ணப்பூச்சு இன்றி பொலிவு இல்லாமல் காணப்படுகிறது

தமிழகத்தின் உண்மையான கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை அழிக்க நிறைய பேர் துடிக்கிறார்கள். மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்காகவே ஜியு போப், கால்டுவெல் இந்தியாவிற்கு வந்தனர்.

இயேசுவையும் பைபிளையும் எனக்கு பிடிக்கும். இந்தியாவை ஆட்சி செய்வதற்கு மதமாற்றம் என்ற கொள்கையை பிரிட்டிஷ் அரசு மேற்கொண்டது என்று ஆளுநர் ரவி பேசியுள்ளார்.

Edited by Siva