வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2019 (11:11 IST)

கோட்சே குறித்து சர்ச்சை பேச்சு: சாத்வி பிரக்யாசிங்வுக்கு தடை விதித்த பாஜக

மகாத்மா காந்தியை சுட்டு கொலை செய்த கோட்சே குறித்த சர்ச்சை பேச்சு காரணமாக பாதுகாப்பு ஆலோசனை குழுவில் இருந்து பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர் நீக்கப்பட்டதாக பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
நேற்று பாராளுமன்றத்தில் கோட்ச குறித்த சாத்வி பிரக்யாவின் பேச்சுக்கு பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா கடும் கண்டனம் தெரிவித்து நடப்பு நாடாளுமன்ற பாஜக குழு கூட்டங்களிலும் சாத்வி பிரக்யாசிங் பங்கேற்க தடை விதித்தார்.
 
இந்த நிலையில் பிரக்யாசிங் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக காந்தியின் மீது 32 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்குள் வன்மம் இருந்தது. அதன்பிறகே அவரை நான் கொலை செய்தேன். காந்தி ஒரு சார்பு கொள்கையுடையவர் என்பதால்தான் நான் அவரைக் கொன்றேன்” என்று கோட்சேவே ஒத்துக்கொண்டிருப்பதாக ஆ. ராசா பாராளுமன்றத்தில் பேசியபோது இடைமறித்த பிரக்யா தாக்கூர், கோட்சே ஒரு தேச பக்தர் என பேசியது பாஜக உறுப்பினர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது