2021ல் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட பிரியாணி! – ஸ்விகி நிறுவனம் தகவல்!
இந்த ஆண்டில் இந்தியாவில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவாக பிரியாணி உள்ளதாக ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களிடமும் ஸ்மார்ட்போன் வசதி உள்ளது. இதனால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடங்கி பல வேலைகளை செல்போனிலேயே முடித்துக் கொள்ளும் நிலை உள்ளது. இந்நிலையில் ஸொமாட்டோ, ஸ்விகி போன்ற உணவு செயலிகள் வருகையால் உணவு ஆர்டர் செய்தலும் எளிமையாகி உள்ளது.
பலரும் அலுவலகங்கள், சிறிய அளவிலான நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கும் ஸ்விகி உள்ளிட்டவற்றில் ஆர்டர் செய்து உணவை பெறுகின்றனர். இந்நிலையில் இந்த 2021ம் ஆண்டில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு எது என ஸ்விகி அறிவித்துள்ளது. வேறு என்ன..? பிரியாணிதான் அந்த உணவு. கொரோனா காரணமாக பலர் வீடுகளில் முடங்கியிருந்தபோது உணவு டெலிவரி நிறுவனங்கள் செயல்பட்ட நிலையில் பிரியாணி அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட நம்பர் 1 உணவாக உள்ளது. கடந்த ஆண்டில் மசாலா தோசை முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.