செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (08:35 IST)

நாடாளுமன்ற அறிக்கைகள், நேரடி ஒளிபரப்பை காண செயலி! – மத்திய அரசு அறிவிப்பு!

நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்கள் மற்றும் வெளியிடப்படும் அறிக்கையை பொதுமக்கள் காணும் வகையில் செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் பல்வேறு துறை சார்ந்த அறிக்கைகள், மசோதாக்கள், விவாதங்களும் நடைபெறுகின்றன. இவை எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்யப்படுகின்றன. நாடாளுமன்ற விவாதங்களை நேரலையில் காண தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன.

எனினும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப நாடாளுமன்ற நேரலையை செல்போனில் பார்க்க செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார். நேரலை மட்டுமல்லாது மத்திய அரசின் அறிக்கைகள், ஆவணங்கள், எழுத்து வடிவிலான கேள்வி பதில்கள் போன்றவற்றையும் அதில் காணலாம் என கூறப்பட்டுள்ளது.