தொடர்புடைய செய்திகள்
- நாடாளுமன்ற அறிக்கைகள், நேரடி ஒளிபரப்பை காண செயலி! – மத்திய அரசு அறிவிப்பு!
- 27.65 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- காலை உணவைத் தவிர்ப்பதால் என்ன பாதிப்புகள் ஏற்படும்?
- வெங்காயத்தில் உள்ள மருத்துவ பயன்கள்...!
- கொரோனா தடுப்பூசி: மதுவுக்கு 10% தள்ளுபடி முதல் இலவச சமையல் எண்ணெய் வரை - மக்களை கவருமா ஊக்கப்பரிசுகள்?
24 மணி நேரத்தில் 6,317 பேருக்கு கொரோனா! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களில் வேகமாக குறைந்து வருகிறது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 20 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 6,317 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,47,58,481 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 318 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,78,325 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,42,01,966 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 78,190 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
