செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 10 டிசம்பர் 2021 (23:55 IST)

முழு ராணுவ மரியாதையுடன் பிபின் ராவத் உடல் நல்லடக்கம்

21 பீரங்கி குண்டுகள் முழங்க முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின்  உடல்கள் முழு ராணுவ மரியாதையுடன்   நல்லடக்கம் செய்யப்பட்டன. 

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது.
 
இதில், ஒரே விமானி மட்டும் உயிரிபிழைத்தார்.  தற்போது அவருக்கு தீவிர சிகிசை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், இன்று 21 பீரங்கி குண்டுகள் முழங்க முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தும் அவரது மனைவி மதுலிகா ராவத் உடல்கள் ஒரே தகன மேடையில் எரியூட்டப்பட்டன.