அரசு பில் கலெட்டருக்கு 4 வீடு, 20 பிளாட், ரூ.50 கோடி சொத்து....
ஆந்திராவை சேர்ந்த நகராட்சி ஊழியர் ஒருவருக்கு 4 வீடுகள், 20 வீட்டிமனைகள் மற்றும் 50 கோடி ரூபாய் சொத்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் நகராட்சியில் பில் கலெக்டராக பணியாற்றி வரும் முத்ரபோயினா மாதவ் பல கோடி சொத்து குவித்து, தற்போது சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது தந்தை பணியில் இருக்கும் போது மரணமடைந்ததால், இவருக்கு கருணை அடிப்படையில் இந்த வேலை கிடைத்துள்ளது. இவர் பலவிதமான ஊழல்கள் செய்ததாக கூறப்படுகிறது.
அதாவது, முறைகேடான முறையில் சொத்து விவரங்களுக்கு குறைவான தொகைக்கு ரசீது கொடுத்து அதற்காக லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இது சில அதிகாரிகளிடன் துணையுடன் நடந்துள்ளது.
இதனால், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாதவ் மீது புகார்கள் குவிந்தன. இதையடுத்து ஊழல் தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுப்பட்டனர்.
அப்போது மாதவிற்கு சொந்தமாக 4 வீடுகள், 20 வீட்டுமனைகள், பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.