வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 30 மே 2018 (12:20 IST)

நிதி வழங்காத அரசுக்கு எதற்கு வரி செலுத்த வேண்டும்? ஆந்திர முதல்வர் பொளேர்!

தெலங்கானா மாநிலம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட போது ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால், அதை செய்யவில்லை. இதனால் கோபமான ஆந்திர முதல்வர் பாஜகவுடனான கூட்டணியை உடைத்தார். 
 
இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் 3 நாள் மாநாடு விஜயவாடாவில் நடந்தது. இதில் கலந்து கொண்ட சந்திரபாபு நாயுடு மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார். அவர் கூறியது பின்வருமாறு...
 
ஆந்திராவின் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க மறுக்கிறது. ஆனால், தலைநகர் அமராவதியில் இருந்து வருமானவரி, சொத்து வரி, ஜிஎஸ்டி வரி என மிகப்பெரிய அளவில் வரி வசூலாகி மத்திய அரசுக்கு செல்கிறது.
 
தெலுங்கானா மாநிலத்துக்கு ஐதராபாத்தில் இருந்து கூடுதல் வருவாய் கிடைக்கிறது. கர்நாடகத்துக்கு பெங்களூரில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு சென்னையில் இருந்தும் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. 
 
ஆனால், ஏன் ஆந்திராவிற்கு மட்டும் தலைநகரை உருவாக்ககூடாது. ஆந்திராவை புறக்கணிக்கும் மத்திய அரசுக்கு நாம் ஏன் வரி கொடுக்க வேண்டும் என காட்டாமன விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.